தமிழகம்

1.அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.தொடர் கொள்ளைச் சம்பவங்கள் எதிரொலியாக, நகர்ப்புற ஏடிஎம் இயந்திரங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்குப் பிறகும் பணம் நிரப்புவது நிறுத்தப்பட இருக்கிறது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது.

2.நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.


வர்த்தகம்

1.பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., காரணமாக, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சியும், ஏற்றுமதியும் குறைந்திருப்பது, ‘மின்ட் ஸ்ட்ரீட் மெமோ’ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.


உலகம்

1.கொரியப் போர் காரணமாக சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த குடும்ப உறவினர்கள் சந்தித்துக் கொள்ளும் உணர்வுபூர்வமான 3 நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது.


விளையாட்டு

1.ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலத்தை துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை வென்றது.மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.கபடி முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்தியா 43-12 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை பந்தாடியது.ஆசியப் போட்டியின் பாட்மிண்டன் அணி ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர்.

3.ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா கிளப்பின் 6000-ஆவது கோலை அடித்தார் அதன் கேப்டன் மெஸ்ஸி.


ன்றைய தினம்

  • உலக கொசு ஒழிப்பு தினம்
  • நேபாள தந்தையர் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)
  • ஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)
  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)
  • இலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)
  • தென்னகம்.காம் செய்தி குழு