தமிழகம்

1.தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் 4.20 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். மொத்தமுள்ள 5.98 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரத்து 722 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரத்து 179 ஆண் வாக்காளர்களும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, சதவீத அளவில் 71.90 சதவீதமாகும்.
தமிழகத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் 80.49 சதவீத வாக்குகளும், தென் சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 56.34 சதவீத வாக்குகளும் பதிவாகின.


இந்தியா

1.நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள்  தெரிவித்தனர்.


வர்த்தகம்

1.டிஜிட்டல் முறையில் கார் மற்றும் இருசக்கர வாகன கடன்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

2.நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2018-19 நிதியாண்டில் 3 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உலகம்

1.சீன கடற்படையின் 70-ஆவது நிறுவன தினத்தையொட்டி, அந்நாட்டில் குயிங்டாவோ கடல் பகுதியில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் சர்வதேச போர்க்கப்பல்கள் அணிவகுப்பில், இந்திய கடற்படையின் இரு கப்பல்கள் பங்கேற்கவுள்ளன.

2.உள்நாட்டு போர் காரணமாக லிபியா சீர்குலைந்துள்ளதால் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


விளையாட்டு

1.மான்டெகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதி சுற்றில் செர்பிய வீரர் டுஸான் லஜோவிக் 6-4, 75 என்ற செட் கணக்கில் சோனெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதே நேரத்தில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

2.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு மகளிர் பிரிவில் இந்தியாவின் சோனியா சஹல், சதீஷ் குமார் ஆகியோர் முன்னேறினர்.


ன்றைய தினம்

  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி பிறந்த தினம்(570)
  • திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  • ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  • இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)

– தென்னகம்.காம் செய்தி குழு