தமிழகம்

1.சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2, 500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டெடுக்கப்பட்டது.கீழடியில் கடந்த 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2 மற்றும் 3-ஆம் கட்டமாக அகழாய்வு மேற்கொண்டனர். இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது.

இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவை கண்டறியப்பட்டன.சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பட்ட சுடாத மண் குவளை இன்று வரை மட்காமல் உள்ளது.


இந்தியா

1.தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண்ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவி வகித்து வந்தார். தற்போது அந்தப் பதவியில் பகத் சிங் கோஷியாரி (77) நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாசலப் பிரதேச ஆளுநர் பதவியில் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள ஆளுநர் பதவியில் ஆரீஃப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.மத்திய அரசின் சுகாதாரத் திட்டச் சேவைகள் (சிஜிஹெச்எஸ்), வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.


வர்த்தகம்

1.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான மொத்த வசூல் ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவாக ரூ. 98.202 ஆக சரிந்துள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.02 லட்சம் கோடியாக காணப்பட்டது.

2.2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை மொத்தம் 5.65 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த 2017-18-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். 2017-18-ஆம் நிதியாண்டில் 5.42 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.


உலகம்

1.இரண்டாம் உலகப் போரின்போது தங்கள் நாட்டுப் படையினர் போலந்து மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு ஜெர்மனி மன்னிப்பு கோரியது.
அந்தப் போரின்போது, ஜெர்மனி படைகள் போலந்து நாட்டின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினத்தையொட்டி அந்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் இவ்வாறு மன்னிப்பு கேட்டார்.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் யஷ்ஹஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

2.கோவை, செட்டிபாளையத்தில் ஜே.கே டயர் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னை வீரர் ராகுல் ரங்கசாமி முதலிடம் பெற்றார்.

3.யுஎஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா மூன்றாவது சுற்றில் கோகோ கெளஃபை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் ஆன்ட்ரிஸ்கு 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கரோலின் வோஸ்னியாக்கியை வென்றார்.

4.உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் நடைபெற்ற சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா.


ன்றைய தினம்

  • வியட்நாம் குடியரசு தினம்(1945)
  • ஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)

– தென்னகம்.காம் செய்தி குழு