தமிழகம்

1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.82 கோடியாக உள்ளது.

2.வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் பணப் பரிவர்த்தனை (பேமென்ட்ஸ்) வங்கிச் சேவை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


இந்தியா

1.உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோயை நியமிக்குமாறு, தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்யவுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட பின்னரே அவரது நியமனம் உறுதி செய்யப்படும்.

2.நிகழாண்டில் மொத்தம் 5.42 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3.சமண மதத் துறவி தருண் மகராஜ் (51) உடல் நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.


வர்த்தகம்

1.நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்துள்ளது.

2.வாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸூகியின் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்து 1,58,189-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 1,63,701-ஆக காணப்பட்டது.


உலகம்

1.பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஆசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை விளையாட்டில், ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி விளையாட்டில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


ன்றைய தினம்

  • வியட்நாம் குடியரசு தினம்(1945)
  • ஐரோப்பாவில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • அமெரிக்காவில் முதலாவது ஏடிஎம் மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)
  • தென்னகம்.காம் செய்தி குழு