தமிழகம்

1.கிருஷ்ணா நீரை கண்டலேறு அணையிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

2.ஆன்லைன் மூலம் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான ஆணையைப் புதுப்பிக்கும் நடைமுறையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.


இந்தியா

1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவுக்கு மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஒப்புதல் அளித்தார்.

2.அடுத்த இரு ஆண்டுகளில் காதி பொருள்களின் விற்பனை ரூ. 10,000 கோடி அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மத்திய குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.


வர்த்தகம்

1.ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற செப்டம்பர் மாதத்தில் 55 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டது.

2.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் செப்டம்பர் மாத விற்பனை 24 சதவீதம் சரிவடைந்தது.

3.செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 91,916 கோடியாக சரிந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வரி ரூ. 94,442 என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் நிகழாண்டு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 2.67 சதவீதமாக சரிந்துள்ளது.

4.லாபத்தில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்), ஷிப்பிங் காா்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்சிஐ) ஆகியவற்றின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய பங்கு விலக்கலுக்கான மத்திய அரசின் செயலா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

5.இந்தாண்டு, செப்டம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 51.4 புள்ளிகளாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் இதே நிலையில் தான் இருந்தது. இதையடுத்து, இந்த இரு மாதங்களிலும், பி.எம்.ஐ., குறியீடு, 2018 மே மாதத்துக்கு பிறகான குறைவாக தொடர்கிறது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

5.நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 0.5 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 4.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.நடப்பு ஆண்டின், ஆகஸ்ட் மாதத்தில், முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.


உலகம்

1.ரஷ்யாவின் கலாசாரத் தலைநகரான செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரத்துக்கு இ-விசா வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.அமெரிக்காவுக்கும், தங்களுக்கும் இடையே இந்த மாதம் 5-ஆம் தேதி பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று வட கொரியா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஹாக்கி டெஸ்ட் தொடரில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியத்தை 2-ஆவது முறையாக வென்றது இந்திய அணி.

2.உலக ஜூனியா் கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்
  • மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)
  • இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
  • தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினம்(1975)

– தென்னகம்.காம் செய்தி குழு