தமிழகம்

1.தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்கள் டி.என்.ராஜகோபாலன், மணிசங்கர் ஆகியோர் வியாழக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர்.


இந்தியா

1.நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அஜய் ரோத்தகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் புதிதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2.ஒடிஸா மாநிலம் ஜர்சுகுடா விமான நிலையத்திற்கு வீர் சுரேந்திர சாய் விமான நிலையம் என பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.மேயர், துணை மேயர் உள்ளிட்டோரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஜம்மு – காஷ்மீர் அரசு மேற்கொண்டுள்ளது.


வர்த்தகம்

1.சென்ற அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்தாண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

2.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான, புதிய திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

3.நிக்கி –மார்க்கிட்  நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் அதிகரித்து உள்ளது.அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 53.1 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, செப்டம்பரில், 52.1 புள்ளிகளாக இருந்தது.ஆகஸ்டில், இக்குறியீடு, 51.7 புள்ளிகள் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.


உலகம்

1.சிறைத் தண்டனையிலிருந்து தப்பி இலங்கையில் தஞ்சமடைந்திருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், 2 ஆண்டுகளுக்குப் பிறகு  தாயகம் திரும்பினார்.

2.குவைத் பிரதமர் ஷேக் சாபா அல் அகமது அல் ஜாபர் அல் சாபாவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.


விளையாட்டு

1.ஐசிசி ஹால் ஆஃப் பேமில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)
  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)
  • நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)
  • தென்னகம்.காம் செய்தி குழு