தமிழகம்

1. தமிழகத்தில் 7,726 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2.தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை ஆசிரியர் பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலத்தை ஜூலையில் விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.21,163 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.54,733 கோடி (இறக்குமதி வரி ரூ.23,289 உட்பட) மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.9,168 கோடி (இறக்குமதி வரி ரூ.1,053 உட்பட) வசூலாகியுள்ளது.


உலகம்

1.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

2.விக்கிலீக்ஸ் வலைதளத்தை நிறுவிய ஜூலியன் அசாஞ்சுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 50 வார (11.5 மாதங்கள்) சிறை தண்டனை விதித்து  தீர்ப்பளித்தது.


விளையாட்டு

1.இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், சக வீரர்களான சிங்லென்சனா, ஆகாஷ்தீப், வீராங்கனை தீபிகா ஆகியோர் அர்ஜுனா விருதுக்கும் ஹாக்கி இந்தியா நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

2.நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் ஜியியிடம்  தோல்வி அடைந்தார் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால்.

3.துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், சர்வதேச அளவில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா.


ன்றைய தினம்

  • உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952
  • இத்தாலி ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)
  • இந்திய திரைப்பட இயக்குனர் சத்யஜித் ராய் பிறந்த தினம்(1921)
  • ஈரான் ஆசிரியர் தினம்
  • போலந்து கொடி நாள்

– தென்னகம்.காம் செய்தி குழு