Current Affairs – 2 May 2018
தமிழகம்
1.குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, வரும் வெள்ளிக்கிழமை (மே 4) கடைசி நாளாகும்.
2.மு.வ.அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மு.வ.விருது இந்த ஆண்டு கவிஞர் ம.நாராயணனுக்கு வழங்கப்பட்டது.
இந்தியா
1.ரயில்வே ஊழியர்கள் தங்களது ஊதிய விவரங்கள், பணி மூப்புப் பட்டியல் உள்ளிட்டவற்றைப் பார்வையிடுவதற்கு வசதியாக செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
2.விமானப் பயணத்தின்போது இணையதளம், அலைபேசி ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பான திட்டத்துக்கு மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
3.2021-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்டி) கட்டாயமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வர்த்தகம்
1.ஏப்ரல் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.03 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
2.நாட்டின் முக்கிய எட்டு துறைகளில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சென்ற மார்ச் மாதத்தில் 4.1 சதவீதமாக குறைந்துள்ளது.
உலகம்
1.வட கொரிய எல்லை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை தென் கொரியா செவ்வாய்க்கிழமை அகற்றியது.
விளையாட்டு
1.ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிகளுக்கு இந்திய கோல்ஃப் வீரர்கள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
2.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முறையே 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.
இன்றைய தினம்
1.போலந்து – கொடி நாள்
2.ஈரான் – ஆசிரியர் நாள்
3.இந்தோனீசியா – தேசிய கல்வி நாள்
4.உலகின் முதலாவது ஜெட் விமானம், லண்டன்-ஜோகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)
–தென்னகம்.காம் செய்தி குழு