தமிழகம்

1.வாக்குப் பதிவின் போது, வாக்கு ஒப்புகை இயந்திரத்தின் பிழையை வாக்காளர்கள் உறுதிப்படுத்தாவிட்டால் ஆறு மாதங்கள் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.


இந்தியா

1.பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான், வெள்ளிக்கிழமை பத்திரமாக நாடு திரும்பினார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை, இந்திய விமானப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

2.தில்லியில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


வர்த்தகம்

1.பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் அதிகரித்துக் காணப்பட்டது. எனினும், மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.

2.நடப்பு 2019-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீத வளர்ச்சி காணும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.


உலகம்

1.வெனிசூலா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் அடுத்தடுத்து கொண்டு வந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.

2.பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) மாநாட்டில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.


விளையாட்டு

1.உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒஸாகாவின் பயிற்சியாளராக ஜெர்மைன் ஜென்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
  • யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது(1995)
  • மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)
  • டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)
  • மகாத்மா காந்தி தண்டி யாத்திரை துவக்கினார்(1930)

– தென்னகம்.காம் செய்தி குழு