தமிழகம்

1.தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

2.ஒரு மாத கால கோடை விடுமுறைக்குப் பின் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

3.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களுக்கு விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இந்தியா

1.அதிநவீன போர் விமானத்தை தனியே இயக்கி, இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை லெப்டினென்ட் மோகனா சிங் பெற்றுள்ளார்.

2.“நிதி கல்வியறிவு வாரம்’ திட்டத்தை ரிசர்வ் வங்கி, கேரளத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளது.

3.இந்தியாவில் இயக்கப்படும் மிகவும் பழைமையான ரயில்களில் ஒன்றான “பஞ்சாப் மெயில்’ ரயில் சனிக்கிழமையுடன் 107 ஆண்டுகளை நிறைவு செய்தது.
பஞ்சாப் மெயில் அல்லது பஞ்சாப் லிமிடெட் என்று அழைக்கப்படும் அந்த ரயில், கடந்த 1912ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி மும்பையில் இருந்து முதன்முதலில் இயக்கப்பட்டது. நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்ட ரயில், பாகிஸ்தானின் பெஷாவருக்கு முதல் பயணத்தை மேற்கொண்டது.

4.“எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான உறுப்பினர்களின் பலம் இல்லாததால், அதனை கேட்கப் போவதில்லை’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

5.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மெக்ஸிகோ நாடால் வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது ‘ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா’  வழங்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1. இந்தியாவுக்கு அளித்து வந்த வர்த்தக முன்னுரிமை (ஜிஎஸ்பி) நாடுகள் என்ற அந்தஸ்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
வரும் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த அறிவிப்பு காரணமாக, இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த 560 கோடி டாலர் (சுமார் ரூ.39,000 கோடி) மதிப்பிலான வர்த்தக சலுகைகள் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

2.நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளது.

3.மத்திய அரசு, திங்கள்கிழமை புதிய வரிசையில் வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,196-ஆக நிர்ணயம் செய்துள்ளது.

4.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 199 கோடி டாலர் (ரூ.13,930 கோடி) அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

5.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.


உலகம்

1.இந்தியா-நேபாளம் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் வரவேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

2.தங்கள் நாட்டுப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதற்குப் பதிலடியாக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் ரூ.4.2 லட்சம் கோடி (6,000 கோடி டாலர்) மதிப்பிலான பொருள்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.குடியாத்தத்தில் கே.எம்.ஜி. கல்லூரியில் 5 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் தமிழ்நாடு ஆண்கள் பிரிவு சாம்பியன் பட்டம் வெற்றது.

2.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-ஆவது சுற்றுக்கு முன்னணி வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.

3.சென்னையில் தொடங்கிய மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியஷன்ஷிப் போட்டியின் முதல்நாளில் வினாயக், ஸ்ரேயா ஈஸ்வர்பிரசாத், விசேஷ் பரமேஷ்வர் சர்மா ஆகியோர் புதிய சாதனைகள் படைத்தனர்.


ன்றைய தினம்

  • பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
  • மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
  • முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953)

– தென்னகம்.காம் செய்தி குழு