தமிழகம்

1.தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டார்.

2.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் காராட்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் மலைப் பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி அதன் இயல்புகளைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்தியா

1.மத்திய கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையை கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

2.நாடு முழுவதும் 230 மில்லியன் டன்களுக்கும் அதிகமான எண்ணெய் படுகைகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) கண்டறிந்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

3.பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் பொதுத்துறை வங்கிகளில் உள்ள கணக்குகளில் 2,313 கணக்குகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத வைப்புத்தொகை ரூ.14,578 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட இத்தொகை 27 % அதிகம் என்றும் நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


வர்த்தகம்

1. ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக உள்ள என்.எஸ். விஸ்வநாதன் மேலும் ஓர் ஆண்டுக்கு அந்தப் பதவியில் நீட்டிப்பார் என மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான ஒப்புதல் வழங்கும் குழு அறிவித்துள்ளது.

2.கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது.

3.டாடா டெலிசர்வீசஸின் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது.

4.தற்போதைய தேதி வரையில், இந்தியா முழுவதும் 6.8 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்களவையில்  தெரிவிக்கப்பட்டது.


உலகம்

1.நோபல் பரிசு பெற்றவர்களின் 69-ஆவது சந்திப்புக் கூட்டம் ஜெர்மனியின் லிண்டா நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 89 நாடுகளைச் சேர்ந்த 580 இளம் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகளும் இதில் கலந்துகொண்டனர்.


விளையாட்டு

1.லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் 133-ஆவது விம்பிள்டன் சாம்பியன் டென்னிஸ் போட்டி தொடங்கியது.


ன்றைய தினம்

  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)

– தென்னகம்.காம் செய்தி குழு