தமிழகம்

1.தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீராதாரம் மற்றும் வன வளத்தை பாதுகாப்பதற்கு, மூல வைகை மற்றும் கொட்டக்குடி ஆறுகளின் குறுக்கே 100 தடுப்பணைகள் கட்டுவதற்கு வனத் துறை திட்டமிட்டுள்ளது.


இந்தியா

1.ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் புதியத் தலைமை இயக்குநர் மற்றும் தலைவராக பி.கே.ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார்.

2.கோடைக்கால விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம்  மீண்டும் திறக்கப்படுகிறது.

3.இந்திய ராணுவத்தில் அக்னி-5 ஏவுகணை விரைவில் சேர்த்து கொள்ளப்பட இருக்கிறது.

4.ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த ஓரிரு நிமிடங்களில் நிரந்தரக் கணக்கு எண்ணை (பான் எண்) விண்ணப்பதாரர்கள் பெற முடியும்.


வர்த்தகம்

1.தொழி­லா­ளர் சேம­நல நிதி­யான, பி.எப்.,­பில் இருந்து பணம் எடுப்­ப­தற்­கான விதி­கள் மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளன.


உலகம்

1.ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் அதிகஅளவில் பணம் வைத்திருப்பவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு இந்தப் பட்டியலில் இந்தியா 88-ஆவது இடத்தில் இருந்தது. இப்பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


விளையாட்டு

1. பெனால்டி ஷூட்அவுட் முறையில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷ்ய அணி உலகக் கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றது.டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸி. அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.


ன்றைய தினம்

  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சாவில் திறக்கப்பட்டது(1962)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)

–தென்னகம்.காம் செய்தி குழு