Current Affairs – 2 January 2019
தமிழகம்
1.தமிழக சட்டப்பேரவை இன்று கூட உள்ளது.
புத்தாண்டின் முதல் கூட்டமான இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைக்க உள்ளார்.
2.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைக் காண கடந்த 2018 ஆம் ஆண்டில் 20.49 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டைக்காட்டிலும் 82 ஆயிரம் குறைவு.
இந்தியா
1.ஆதார் சட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளது.
2.சிக்னல் மற்றும் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் சிக்னல் பராமரிப்பாளர், தொலைதொடர்பு உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு சாம்பல் நிற சீருடைக்கு பதிலாக நீல வண்ணச் சீருடை வழங்கினால், பணியில் உள்ள ஊழியர்களை எளிதில் அடையாளம் கண்டுக் கொள்ள இயலும் என இந்திய ரயில்வேயின் தேசிய கூட்டமைப்பு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
3.நவோதயா பள்ளிகளில் கடந்த 2013 முதல் 2017 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் 49 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4.மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாடக் குழுவின் தலைவராகவும், ராணுவத் தளவாட தொழிற்சாலைகளின் இயக்குநராகவும் செளரப் குமார் பொறுப்பேற்றார்.
5.ஆந்திர மாநிலத்துக்கான தனி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
வர்த்தகம்
1.எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால தலைவராக ஹேமந்த் பார்கவா நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.கே.சர்மா திங்கள்கிழமை (டிச.31) ஓய்வு பெற்றார்.
2.கடந்த ஆண்டு, டிசம்பரில், ஜி.எஸ்.டி., வருவாய், 94 ஆயிரத்து, 726 கோடி ரூபாயாக சரிவடைந்தது. இது, நவம்பரில், 97ஆயிரத்து, 637 கோடி ரூபாயாக இருந்தது.
3.ஆசியான் (தெற்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு (பனை எண்ணெய்) இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் “அல்ட்டிமா துலே'(Ultima Thule) என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் “நியூ ஹொரைஸன்’ விண்கலம் சாதனை படைத்துள்ளது.
2.இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த விவரங்களை இருநாடுகளும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன.
விளையாட்டு
1.ஆடவர், மகளிருக்கான 67-ஆவது தேசிய சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை (2-ஆம்) தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.
2.ஐசிசி சார்பில் நிகழாண்டு 2019-இல் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.
இன்றைய தினம்
- கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)
- முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
- ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)
- ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)
– தென்னகம்.காம் செய்தி குழு