தமிழகம்

1.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள செல்வி அபூர்வா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.

2.கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,225 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, உரிய நபர்களுக்கு அவை பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக, பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழுவின் 2-ஆவது ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

2.தேசிய செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் “டிஜிட்டல்’ கிராமங்கள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

ரூ.5 லட்சம் வரை தனி நபர் வருமான வரி விலக்கு பெற வாய்ப்பு; ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 டெபாசிட் செய்யப்படும்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பின் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கியமான, மக்களைக் கவரும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

2.கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 23,900 கோடி டாலர் (சுமார் ரூ.17,05,145 கோடி) அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த 19 ஆண்டுகளில் முதல் முறையாக தலிபான்களுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ்.

2.இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்), ஒடிஸா மாநில அரசு இணைந்து நடத்தும் நான்கு நாடுகளுக்கான ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் வரும் 9-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்குகின்றன.


ன்றைய தினம்

  • ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
  • முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
  • ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
  • மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)

– தென்னகம்.காம் செய்தி குழு