தமிழகம்

1.கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாவது தவணையாக ரூ.353.70 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

2.மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன.


இந்தியா

1.2018ம் ஆண்டு உலகிலேயே மிக மோசமான பேரிடராக கேரள வெள்ளத்தை சர்வதேச வானிலை மையம் அறிவித்துள்ளது.

2. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்டத் தேர்தலில் 76.9 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுவரை நடைபெற்ற 5 கட்ட தேர்தல்களை ஒப்பிடும்போது இம்முறையே அதிகபட்சமாகும்.

3.இந்திய ராணுவத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.


வர்த்தகம்

1.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நவம்பர் மாதத்தில் ரூ.97,637 கோடியாக குறைந்துள்ளது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 79 கோடி டாலர் (ரூ.5,530 கோடி) சரிந்து 39,278 கோடி டாலராக (ரூ.27.49 லட்சம் கோடி) இருந்தது.

3.ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக சியோன் சியோப் கிம் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.வரும் 2022-ஆம் ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

2.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் வெள்ளிக்கிழமை காலமானார்.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தையான அவருக்கு வயது 94. தனது மனைவி பார்பரா புஷ் (73) மறைந்து 8 மாதங்கள் நிறைவதற்குள் உடல் நலக் குறைவு காரணமாக அவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

3.ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி, இந்தியா-ரஷியா-சீனா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முத்தரப்பு சந்திப்பானது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக நடைபெற்றது.

4.ஆர்ஜென்டீன அதிபர் மொரீசியோ மெக்ரியை சந்தித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


விளையாட்டு

1.தேசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.

2.திருப்பதியில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் (நிட்ஜாம்)  தொடங்கின.


ன்றைய தினம்

  • ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)
  • லாவோஸ் தேசிய தினம்
  • அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)
  • அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)
  • உலக கணினி எழுத்தறிவு தினம்
  • தென்னகம்.காம் செய்தி குழு