தமிழகம்

1.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் போலவே தமிழகத்திலும் இனி உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர்  தெரிவித்துள்ளார்.

2.சென்னையில் விரைவில் கடற்படை தளம் அமைக்கப்படும் என கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் தெரிவித்தார்.


இந்தியா

1.தேசிய அளவிலான ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2.வரும் 2030-ம் ஆண்டுக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும் 4 சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் அணிவதும் உறுதி செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன.


உலகம்

1.ஜப்பான் பேரரசர் அகிஹிடோ வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அரியணை துறப்பார் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்தார்.

2.சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் தேர்தலி்ல் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.


வர்த்தகம்

1.மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பரில் 14.1% அதிகரித்தது.

2.ஹுண்டாய் விற்பனை 10% வளர்ச்சி அதிகரித்தது.

3.பஜாஜ் ஆட்டோ விற்பனை 21% வளர்ச்சி அதிகரித்தது.


விளையாட்டு

1.பிரான்ஸின் மார்சைல் நகரில் நடைபெற்றுவரும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

2.ஹாக்கி உலக லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டம் டிரா ஆனது.

 


இன்றைய தினம்

1.ஐக்கிய நாடுகள் – அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்
2.லாவோஸ் – தேசிய நாள்
3.ஐக்கிய அரபு அமீரகம் – தேசிய நாள் (1971)

–தென்னகம்.காம் செய்தி குழு