தமிழகம்

1.காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 5 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

2.சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநராக (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) எஸ்.எம்.என். சுவாமி பொறுப்பேற்றுள்ளார்.

3.கடந்த 25 மாதங்களில் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி சென்னை புறநகர் மண்டல ஆணையர் ஜி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.


இந்தியா

1.இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2.வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கு விவரங்களை விரைவாகவும், எளிதாகவும் தாக்கல் செய்யும் வகையில் லைட் இ-பைலிங் என்ற புதிய வசதியை வருமான வரி துறை அறிமுகம் செய்துள்ளது.

3.முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

4.சாலைப் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.

5.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சிறப்பு செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி இ.எல்.எஸ்.என். பால பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. புதிய ஆர்டர்கள், அதிக உற்பத்தி ஆகியவை காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2.புதிய தொழில் துவங்குவோர் பட்டியலில், தமிழகம், 7வது இடத்தில் உள்ளது என, தொழில் வணிக துறை கமிஷனர், ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.

3.ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 28 சதவீதம் சரிந்துள்ளது.

4.டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலை மாதத்தில் 12.98 சதவீதம் குறைந்துள்ளது.

5.தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ளது.


உலகம்

1.மாலத்தீவில் இருந்து சிறிய வகை சரக்கு கப்பலில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தூத்துக்குடி வந்த அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் மத்திய, மாநில உளவுத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
ஐ.நா.பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

3.செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஆய்வுக் கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஜப்பானிலுள்ள டானேகஷிமா ஏவுதளத்திலிருந்து அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்படவிருக்கிறது.


விளையாட்டு

1.தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீரர்கள் சாய் பிரணீத், இரட்டையர் பிரிவில் சத்விக்-சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.ரஷ்ய மகோமத் சலாம் உம்கானோவ் சர்வதேச குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

3.பல்கேரியாவில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் பின்பின் ஸியாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே இந்திய அணி ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது.


ன்றைய தினம்

  • மேசிடோனியா குடியரசு தினம்
  • உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  • அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
  • தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)

– தென்னகம்.காம் செய்தி குழு