தமிழகம்

1.வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2.ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் குறித்து வரும் 20 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.ரயில்வேயின் வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2.ஆதார் தகவல் இணையதளம் உட்பட பொதுவெளியில் பகிர வேண்டாம் என பொதுமக்களை ஆதார் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.


வர்த்தகம்

1.இரண்டு மாத இடைவேளையில் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டியும் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.96,483 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடி வசூலாகி இருந்தது.


உலகம்

1.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 3 மத்திய ஆசிய நாடுகளில்  சுற்றுப்பயணம் செய்கிறார்.


விளையாட்டு

1.அமெரிக்காவில் நடைபெறும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஆகியோர் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினர்.


ன்றைய தினம்

  • மேசிடோனியா குடியரசு தினம்
  • உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  • அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
  • தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)

–தென்னகம்.காம் செய்தி குழு