Current Affairs – 2 April 2019
தமிழகம்
1.பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். முள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரம். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி என முக்கியத்துவம் வாய்ந்த எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
2.தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
3.திருப்பத்தூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டுமுறை என்பது இயற்கையை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.
பஞ்ச பூதங்கள், மரங்கள் வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அவ்வரிசையில் இடம்பெற்றதே கொற்றவை வழிபாடாகும்.
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமான கொற்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகாரக் காப்பியமாகும்.
கொற்றவை வழிபாட்டு முறையை விளக்கும் வகையில் தனியாக ஒரு காதையையே இளங்கோவடிகள் வடித்துள்ளார். மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.இந்தியா உள்பட 5 நாடுகளின் 29 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
2.வாக்கு ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து பதில் தாக்கல் செய்வதற்கு, 21 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஒருவாரகாலம் அவகாசம் அளித்துள்ளது.
3.ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஜம்மு காஷ்மீர் (ஜேஇஎல்-ஜே.கே), ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி-யாசீன் மாலிக் பிரிவு (ஜேகேஎல்எஃப்-ஒய்) ஆகிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஆய்வு செய்ய தில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி சந்தரசேகர் தலைமையில் தனித் தீர்ப்பாயத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகம்
1.முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற பிப்ரவரி மாதத்தில் 2.1 சதவீதமாக குறைந்தது.
2.கடந்த மார்ச் மாதத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனை மந்த நிலையை கண்டுள்ளது.
3.கடந்த நிதியாண்டில், இந்திய ரயில்வே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, 6,037 ரயில் பெட்டிகளை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.
4.கடந்த மார்ச்சில், ஜி.எஸ்.டி., வருவாய், மீண்டும், 1.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.இதன் மூலம், 2018– 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வசூல், பட்ஜெட் மறுமதிப்பீட்டை விட அதிகரித்து, 11.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உலகம்
1.உக்ரைன் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், காமெடி நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கிமுன்னிலை பெற்றுள்ளார். இதனால் அவர் அந்நாட்டு அதிபராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
2.இரண்டாம் தலைமுறை தகவல் ரிலே செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சீனாவின் திட்டத்துக்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும்.
3.ஜப்பானில் புதிய பேரரசர் பதவியேற்க உள்ளதையடுத்து, அவருடைய ஆட்சிக் காலமான புதிய சகாப்தம், ரெய்வா என அழைக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.உலகின் ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் 10 இடங்களில் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் செளரவ் கோஷல்.
2.மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றத்தின் மூலம் தனது 101-ஆவது பட்டத்தை வென்றார் பெடரர்.
3.ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்றது.
10மீ ஏர் ரைபிள் (ஜூனியர்) பிரிவில் இந்திய வீராங்கனை ஷிரேயா அகர்வால் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இன்றைய தினம்
- உலக ஆட்டிசம் தினம்
- உலக சிறுவர் நூல் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
- அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
- போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)
– தென்னகம்.காம் செய்தி குழு