தமிழகம்

1.உள்ளாட்சித் தேர்தல்களுக்காக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளன.


இந்தியா

1.ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது.

2.இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, விநியோகம், விற்பனை ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், நாளை(20-09-2019) நடைபெற உள்ளது.


உலகம்

1.இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2.இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.நிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்.

2.உலக மல்யுத்த போட்டியில் பெற்ற இரண்டாவது வெற்றி மூலம் இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

3.பான் பசிபிக் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனை நவோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சிலி ராணுவ தினம்
  • சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)
  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)
  • அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு