தமிழகம்

1.தமிழகத்துக்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக மின் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.

2.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.) வேதி அறிவியல் பிரிவு 2018 ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருது காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வக (செக்ரி) ஆராய்ச்சியாளர் முனைவர் நவீன்குமார் சந்திரசேகரனுக்கு அறிவித்துள்ளது.


இந்தியா

1.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா (91),  மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார்.

2.குடிநீர்த் தட்டுப்பாடு, சுகாதாரக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை மருத்துவ வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால், இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) அவையின் குழந்தை இறப்பு மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.ரூ. 9,100 கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சகம்  ஒப்புதல் வழங்கியது.

4.நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 22 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


வர்த்தகம்

1.நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம் இனி தொலைத் தொடர்பு வர்த்தகத்திலிருந்து விலகி எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

2.நாட்டின் உணவு தானிய உற்பத்தி 2018-19-ஆம் பயிர் பருவத்தில் 28.52 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14.5 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.4.36 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

2.வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உறவை பலப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

3.அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், தாம் நிலவுக்கு முதல் முறையாக சுற்றுலா அழைத்துச் செல்லவிருக்கும் நபராக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேஸவாவை அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். எனினும், சாய்னா நெவால் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.


ன்றைய தினம்

  • சிலி ராணுவ தினம்
  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)
  • அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)
  • தென்னகம்.காம் செய்தி குழு