தமிழகம்

1.தமிழகத்தில் மத்திய, மாவட்ட சிறைகளில் உள்ள 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக நிகழாண்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2.அரசு அறிவிக்கும் விடுமுறைகள் தனியாா் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.இந்திய அளவில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கும், தொழில் முதலீடுகளை செய்யவும் சிறந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் வரிசையில் கர்நாடக முதலிடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா, தமிழ்நாடு , குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள் பிரிவில் மணிப்பூர், அருணாசல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.

யூனியன் பிரதேசங்கள் வரிசையில் லட்சத் தீவு, டெல்லி. கோவா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள உகந்த மாநிலங்களின் வரிசையிலும் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.

2.கருப்புப் பூனை படை என்றழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி அனுப் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

3.‘இன்டா்போல்’ அமைப்பின் 91-ஆவது பொது அவை கூட்டம் வரும் 2022-இல் இந்தியாவில் நடைபெறுகிறது.சிலியின் சாண்டியாகோவில் இன்டா்போலின் 88-ஆவது பொது அவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

4.உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளாா்.

5.இந்தியாவில் காசநோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் குறைந்துள்ளது. எனினும், உலக அளவில் காசநோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-ஆம் இடத்தில் உள்ளது.

6.அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) தயாரிப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா் பிரதீக் ஹஜேலாவை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிடமாற்றம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் அந்த மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7.பெரிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் 37.7 சதவீத பால் மாதிரிகள், உரிய தரம் மற்றும் பாதுகாப்பானதாக இல்லாமல் இருப்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


வர்த்தகம்

1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

2.சீனாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மூன்றாவது காலாண்டில், 6 சதவீதமாக சரிவை கண்டுள்ளது. 1992ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் சரிவாகும் இது.

3.வணிக ரீதியில் வழங்கும் கடன் அளவில், வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள், 10 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. இந்த நிறுவனங்கள் வழங்கும் கடன் அளவு, கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட, 8 சதவீதம் குறைந்துள்ளது.இந்த கடன்களின் எண்ணிக்கை, 1.68 லட்சம் ஆகும். இதுவே கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு முடிவில், 1.8 லட்சமாகவும், இரண்டாம் அரையாண்டு முடிவில், 1.7லட்சமாகவும் இருந்தன.மேலும், கடன் கேட்டு வரும், 100 விண்ணப்பங்களில், 72 விண்ணப்பங்களுக்கு மட்டுமே, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்கப்படுகின்றன.

4.நாட்டில், மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, ‘கார்வி வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டில், 2.56 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், இவர்களின் எண்ணிக்கை, 2.63 லட்சமாக இருந்தது என, கார்வி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

5.நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்), நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.4,960.27 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,466.94 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.27 சதவீதம் குறைவாகும்.


உலகம்

1.அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீா் ஆகிய இருவரும் விண்வெளியில்  நடந்து சாதனை படைத்துள்ளனா்.ஆண்கள் துணையில்லாமல் முழுவதும் பெண்களே விண்வெளியில் நடந்து பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்வது விண்வெளி ஆய்வு வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2.கடல்சாா் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை தொடா்பாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளுக்கிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

3.பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ பட்டியலில் வைத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்காவிடில், அந்நாடு ‘கருப்பு’ பட்டியலுக்கு மாற்றப்படும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

4.பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

5.ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதியாகும் 750 கோடி டாலா் (சுமாா் ரூ.53,300 கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.7-ஆவது உலக ராணுவ வீரர்கள் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, அக்டோபர் 18-ஆம் நாள் சீனாவின் வூகான் நகரிலுள்ள விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

2.ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம், 9 வெள்ளியுடன் இந்தியா 21 பதக்கங்கள் வென்றது.


ன்றைய தினம்

  • அல்பேனியா – அன்னை தெரசா தினம்
  • நியுயே – அரசியலமைப்பு தினம்(1974)
  • மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)

– தென்னகம்.காம் செய்தி குழு