தமிழகம்

1.கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் அதிவேக அணு உலை அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் பாதுரி தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். தில்லி வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
2.உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன், பேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சான்ட்பெர்க் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கிறிஸ் கோக்ஸ் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் சமூக வலைதளம் ஒரு செயலியை நடத்துகிறது. அதில், எந்த அனுமதியும் பெறாமல் தேசிய சின்னங்களை பயன்படுத்த அது அனுமதிக்கிறது என்பதற்காக இந்த வழக்கு தொடர பட்டுள்ளது.
3.உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்.
4.கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் இந்தியாவுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
5.தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடியை வழங்கியுள்ளது.
6.சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
7.சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஐஎஸ்எல் கால்பந்தின் நேற்றைய போட்டியில் சென்னையின் எஃப்சி அணி நார்தஈஸ்ட் யுனைடெட் அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.


ன்றைய தினம்

    • தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன(2009)
  • தென்னகம்.காம் செய்தி குழு