தமிழகம்

1.குண்டர் தடுப்புச் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2.மதுரை விமான நிலையத்தில் ஆன் லைன் மூலம் விசா பெறுவதற்கான இ விசா சேவை வியாழக்கிழமை தொடங்கியது.


இந்தியா

1.உத்தரப் பிரதேச மற்றும் உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயண் தத் திவாரி(93) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
2.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை மூத்த வழக்குரைஞர் மணீந்தர் சிங்  ராஜினாமா செய்தார்.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் உள்நாட்டில் தங்கம் இறக்குமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

2.பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் செப்டம்பர் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(ஐஆர்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


உலகம்

1.செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

2.ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நிலையிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்மலா சீதாராமன் சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை சென்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

3.அமெரிக்காவில் ஹெச்-1பி விசா நடைமுறையில் வரும் ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

2.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு  முன்னேறினார்.


ன்றைய தினம்

  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)
  • தென்னகம்.காம் செய்தி குழு