தமிழகம்

1.புயலால் பாதித்த பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் 1,386 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக கடந்த 3 நாள்களில் 84,436 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களின்  தலைவருமான கோ.வீரய்யன்(86) காலமானார்.


இந்தியா

1.வேண்டுமென்று நிதி மோசடியில் ஈடுபட்டோர் குறித்த பட்டியலை வெளியிடும்படி, பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

2.ஆறு உயர்நீதிமன்றங்களுக்கு புதிதாக 34 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.அவர்களில், அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு 28 நீதிபதிகளும், குவாஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, மேகாலயம், ஒடிஸா மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.நடப்பு நிதி ஆண்டு முடிவுக்குள் சர்வதேச பேஸல் விதிமுறைகளுக்கு ஏற்ப, பொதுத் துறை வங்கிகளுக்கு சுமார் ரூ. 1.2 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் செலுத்த வேண்டி வரும்.

2.பாரத ஸ்டேட் வங்கி கடந்த அக்டோபர் 1 முதல் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.401.73 கோடி மதிப்புக்கு தேர்தல் நிதி பத்திரங்களை விற்பனை செய்ததாகத் தெரியவந்துள்ளது.


உலகம்

1.பிஜி தீவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் வோர்க் பைனிமராமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

2.மாலத்தீவில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

3.இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கும், அசாதாரண சூழல்களுக்கும் தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அதிபர் சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.


விளையாட்டு

1.ஏஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை மனிஷாமெளன். அதே நேரத்தில் மூத்த வீராங்கனை மேரிகோம், லவ்லினா, பாக்யபதி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

2.உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய  வீரர் லக்ஷயா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • உலக கழிப்பறை தினம்
  • சர்வதேச ஆண்கள் தினம்
  • பிரேசில் கொடிநாள்
  • இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
  • வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
  • தென்னகம்.காம் செய்தி குழு