தமிழகம்

1.தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (மே 19) நடைபெறுகிறது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

2.ஒடிஸா கடலோரப் பகுதிகளில் “பசுமை அரண்’ அமைக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

3.ஹிமாசலப் பிரதேச மாநிலம், தஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிதான் உலகின் மிக உயரமான பகுதியில் உள்ள வாக்குச்சாவடியாகும்.

4.பிரான்ஸில் நடைபெறும் 72-ஆவது கான்(Cannes) திரைப்பட விழாவில் இந்திய இயக்குநர் அச்சுதானந்த துவிவேதி விருது வென்றார்.

“சீட் மதர்’ என்ற அவரது 3 நிமிட படத்துக்காக அவர் மூன்றாவது பரிசு பெற்றார்.
“நெஸ்பிரஸா டேலன்ட்ஸ்’ பிரிவில் இந்த விருதுக்கு அச்சுதானந்த துவிவேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,005 கோடி டாலரை (ரூ.29.40 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.தேர்தலில் வெற்றி பெற தங்களுக்கு உதவினால், அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதாக ஆஸ்திரிய துணை பிரதமர் ஹீனஸ்-கிறிஸ்டியன் ஸ்டிராஷே பேரம் பேசிய ரகசிய விடியோ வெளியானதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2.ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றதாக பூர்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.


விளையாட்டு

1.கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களின் முடிவில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

2.இத்தாலி ஓபன் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால் மகளிர் பிரிவில் ஜோஹன்ன கொண்டா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
  • இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
  • சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
  • இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)

– தென்னகம்.காம் செய்தி குழு