Current Affairs – 19 May 2018
தமிழகம்
1.தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.சுதாகர் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
2.கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூரில் அகழ்வு வைப்பகம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
இந்தியா
1.மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 85 சதவீத இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
வர்த்தகம்
1.கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம்
1.பிரிட்டன் இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ளது.
விளையாட்டு
1.அகில இந்திய அளவிலான ஐவர் பூப்பந்துப் போட்டிகளில் தெற்கு, மேற்கு ரயில்வே அணிகளும், சென்னை ஐ.சி.எப். அணியும் வெற்றி பெற்றன.
இன்றைய தினம்
- கனடாவின் மொன்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
- இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடியான ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
- சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
- இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)
–தென்னகம்.காம் செய்தி குழு