Current Affairs – 19 March 2019
தமிழகம்
1.கோயில்கள் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகளை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்தியா
1.மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
2.சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளா எத்தகைய ஏற்பாட்டில் நடத்தப்பட்டது என்பது தொடர்பான அசல் ஆவணங்கள் இடம் பெற்ற கண்காட்சி தில்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 129-ஆவது நிறுவன தினத்தையொட்டி கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்தக் கண்காட்சி “கும்ப்’ எனும் பெயரில் தொடங்கியது.
வர்த்தகம்
1.மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் (அட்மா) தலைவராக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.எம். மேமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.தேவையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியாக மாருதி சுஸுகி நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் அளவுக்கு வாகன உற்பத்தியை குறைத்துள்ளது.
3.இன்று கூடும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு குறைக்கப்பட்ட வரி தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது.
உலகம்
1.எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒடுக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என்று மாலத்தீவுகள் உறுதி அளித்துள்ளது.
விளையாட்டு
1.ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
2.அயர்லாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.
3.இந்தியன்வெல்ஸ் ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீம், ஆன்ட்ரீஸ்கு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
4.பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில், 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் அவினாஷ் சாப்லே புதிய சாதனையுடன் உலக தடகள சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்றைய தினம்
- இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
- நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
- புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
- சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
- அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)
– தென்னகம்.காம் செய்தி குழு