தமிழகம்

1.திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆவடி சிறப்பு நிலை நகராட்சியானது, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அவசரச் சட்டம் மூலம் இதற்கான ஒப்புதலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கியுள்ளார்.


இந்தியா

1.மக்களவைத் தலைவர் பதவிக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டார்.

2.வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் காதி துணியின் பங்களிப்பு 5 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்  தெரிவித்தது.

2.வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் (டிஜிஎஃப்டி) அலோக் வரதன் சதுர்வேதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு  தெரிவித்ததது.


உலகம்

1.அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை கடந்த 2010-2017 காலகட்டத்தில் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

2.பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயத்தை பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் (ஃபேஸ்புக்) லிப்ரா என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.


விளையாட்டு

1.எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக  நடைபெற்ற ஆட்டங்களில் ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • ஹங்கேரி விடுதலை தினம்
  • குவைத், ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)
  • வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது(1910)
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த தினம்(1970)

– தென்னகம்.காம் செய்தி குழு