தமிழகம்

1.டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க 3-ஆவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) தமிழ் உள்பட 20 இந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டுள்ளார்.


வர்த்தகம்

1. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆபரண வர்த்தக துறையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என தரக்குறியீட்டு நிறுவனமான கேர் தெரிவித்துள்ளது.


உலகம்

1. உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, சூப்பர் கம்ப்யூட்டர்’ எனப்படும் அதிவேகக் கணினியை அமெரிக்க விஞ்ஞனிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.சம்மிட் கணினி, நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன்கணக்கீடுகளை செய்ய வல்லது ஆகும்.இதுவரை ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்கவம் உருவாக்கிய அதிசக்தி வாய்ந்த டைட்டன் கணினியைவிட இது 8 மடங்கு அதிக வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1. பிரேஸில் அணியும்-சுவிட்சர்லாந்து அணியும் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.தென்கொரிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்வீடன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

2.ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவை ஆஸ்திரேலிய அணி கண்டுள்ளது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் 6-ஆம் இடத்துக்கு சரிந்தது. முன்னதாக, 1984-ஆம் ஆண்டு கடைசியாக 6-ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.


ன்றைய தினம்

  • ஹங்கேரி விடுதலை தினம்
  • குவைத், ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)
  • வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது(1910)
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் பிறந்த தினம்(1970)

–தென்னகம்.காம் செய்தி குழு