Current Affairs – 19 July 2019
தமிழகம்
1.தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
2.தில்லியில் வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மோரீசியஸ் சர்வதேச திருக்குறள் ஃபவுண்டேஷன், சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன.
இந்தியா
1.கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் “சிப்’ பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2.நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளிக்கும் “பாரத்நெட்’ திட்டத்துக்காக, ரூ.20,431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
3.நேர்மையின்மை, போதிய திறமையின்மை உள்ளிட்டவை காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில் 1,083 உள்துறை அமைச்சக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4.பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது.
வர்த்தகம்
1.முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில், 2 சதவீத கடன்கள், வாராக் கடனாக மாறியுள்ளன,’’ என, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர், அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
2.ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘இ – வே’ பில் முறையில், ஏழு கோடி பில்கள் பதிவுடன், தமிழகம், ஐந்தாம் இடத்தில் உள்ளதாக, வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, ஆசிய
மேம்பாட்டு வங்கி, முந்தைய கணிப்பிலிருந்து குறைத்து, அறிவித்துள்ளது.
4.இந்தியாவில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளதாக, ‘ரேஸர் பே’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம்
1.இந்தியாவுடன் பாதுகாப்பு ரீதியிலான உறவு வலுவாக உள்ளது; அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.
2.காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.
3.இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து.
இன்றைய தினம்
- நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
- நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)
- பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
- இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
– தென்னகம்.காம் செய்தி குழு