Current Affairs – 19 July 2018
தமிழகம்
1.மோரீசியஸ், பிஜி தீவுகள் உள்பட 26 இடங்களில் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
இந்தியா
1.தலைமை தகவல் ஆணையர், இதர தகவல் ஆணையர்களின் ஊதியம், பணி தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்காக தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
2.கும்பல் கொலை விவகாரம் குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் 3 கட்சிகளால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.மத்திய அரசு, லாரி, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு செல்லும் சரக்கின் எடை அளவை, 25 சதவீதம் உயர்த்தி நிர்ணயித்துள்ளது. அத்துடன், வர்த்தக வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு காலத்தை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
உலகம்
1.கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி (4.3 பில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை சந்தையில் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய் பிரணீத், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
இன்றைய தினம்
- நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)
- நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)
- பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
- இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
–தென்னகம்.காம் செய்தி குழு