தமிழகம்

1.வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட முக்கிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

2.ஓய்வூதியதாரர்களுக்கான தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

3.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.மும்பை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளாக 3 பேரை உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு தேர்வு செய்துள்ளது.மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பி.வி. கானேதிவாலாவையும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, கீழமை நீதிமன்ற நீதிபதி மனோஜித் மோந்தல், வழக்குரைஞர் சந்திபன் கங்குலி ஆகியோரையும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.இந்திய கடற்படையின் ஒட்டுமொத்த பலத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிதாக 3 கடற்படை விமானப் பிரிவுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


வர்த்தகம்

1.தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள விப்ரோ நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.2,544.5 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

2.எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற, 363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 111 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3.ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் இனி ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் என மாற்றப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.


உலகம்

1.ஸ்வீடனில் நிலவி வந்த நான்கு மாத அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2.விண்கற்கள் பூமியில் விழும்போது, அவை பல்வேறு துண்டுகளாக சிதறி எரிந்து விழும் கண்கொள்ளா காட்சியை ஹிரோஷிமா நகர வான்வெளியில் செயற்கையான முறையில் உருவாக்க ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

3.காங்கோ குடியரசில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் சர்ச்சைக்குரிய முடிவுகளை நிறுத்திவைக்கும்படி ஆப்பிரிக்க யூனியன் வலியுறுத்தியுள்ளது.

4.இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் நஸாமி ஒகுராவை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா.


ன்றைய தினம்

  • ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
  • கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)
  • நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)

– தென்னகம்.காம் செய்தி குழு