இந்தியா

1.தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியா நியமிக்கப்பட்டுள்ளார்.
2.இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.
3.ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் புதிதாக 9 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈரோடு இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று ஜேம்ஸ் வாட் பிறந்த தினம் (James Watt Birth Anniversary Day).
ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். கல்வியை தாயாரிடம் வீட்டிலேயே கற்றார். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். நீராவி இயந்திரத்தில் இவர் செய்த மேம்பாடுகளே பிரிட்டிஷ் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட அடிப்படையாக அமைந்தன.

 

–தென்னகம்.காம் செய்தி குழு