தமிழகம்

1.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிற விவகாரங்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் முறையீடு செய்யவும்  உத்தரவிட்டுள்ளது.

2.சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து நீதி விசாரணை கோரி தொடுக்கப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.


வர்த்தகம்

1.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவன நிதி விவகாரப் பிரிவின் இயக்குநராக ஏ.கே.சர்மாவை மத்திய அரசு மீண்டும் நியமித்துள்ளது.

2.மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.28,000 கோடி வழங்கப்படும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டனிலுள்ள முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்து 7 எம்.பி.க்கள் விலகியுள்ளனர்.

2.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகளில், மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.


விளையாட்டு

1.தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.


ன்றைய தினம்

  • துருக்மேனிஸ்தான் கொடி நாள்
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)
  • கலிப்பொலி போர் துவங்கியது(1915)
  • கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1878)
  • ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து சைப்பிரஸ் விடுதலை பெற்றது(1959)

– தென்னகம்.காம் செய்தி குழு