இந்தியா

1.மராட்டிய மாநிலத்தின் நவி மும்பையில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
2.ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை தொடர்பு கொள்ளும் வகையில் ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை கையாள மற்றும் இயக்க இந்தியாவின் ஒப்பந்தம் 18 மாந்தங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டி இந்தியா சார்பில் 225 வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வருகிற ஏப்ரல் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற உள்ளது.


இன்றைய தினம்

1.இன்று கோப்பர்நிக்கஸ் பிறந்த தினம் (Copernicus Birth Anniversary Day).
கோப்பர்நிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற பூமி மையக்கோட்பாட்டை மாற்றி சூரிய மையக்கோட்பாட்டை அறிவித்தார். பூமி உள்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற புரட்சிகரமான கொள்கையை வகுத்து, வானியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டார்.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு