தமிழகம்

1.தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

2.கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

3.தகவல் உரிமை சட்ட அமலாக்கத்தில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.உலக பொருளாதார அமைப்பு (WEF) வெளியிட்ட பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.

2.பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

3.ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


வர்த்தகம்

1.தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் வங்கியின் தலைவர் பதவிக்கு பிரஹம் தத் பெயரை அந்த வங்கி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகம்

1.எமனின் ஹுதைதா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.

2.இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதற்கு பிறகு ஜப்பான் முதல் முறையாக விமானம் தாங்கி கப்பல்களையும், போர் விமானங்களையும் கொள்முதல் செய்யவுள்ளது.


விளையாட்டு

1.தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.2015-ல் 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் அரவிந்த் சிதம்பரம்.

2.தொடர் தோல்விகள் எதிரொலியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹோசே மெளரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • கோவா விடுதலை தினம்
  • இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்(1934)
  • தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)
  • முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)
  • போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)
  • தென்னகம்.காம் செய்தி குழு