இந்தியா

1.குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.இதன் மூலம் 6-வது முறையாக பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது.
2.இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளைப் பிடித்து எதிர்க்கட்சியானது. சி.பி.எம் ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.


உலகம்

1.மிகப் பழமையான கிறிஸ்தவ பிரிவான சர்ச் ஆப் இங்கிலாந்து, முதன் முதலாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது.
2.இந்திய விழாக் குழு சார்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியா-அமெரிக்கா 2017 அழகி போட்டியில் வாஷிங்டனைச் சேர்ந்த ஸ்ரீ ஷைனி அழகி பட்டம் பெற்றுள்ளார்.
3.உலகின் மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை வடிவமைத்து பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் இது தயாரிக்கப்பட்டது. 15 மைக்ரோ மீட்டர் நீளமும் 20 மைக்ரோ மீட்டர் அகலமும் கொண்டது. இந்த வாழ்த்து அட்டையில் சிலிகான் நைட்ரேட் பிளாட்டினம் பூசப்பட்டுள்ளது.
4.உலகில் முதல் முறையாக துபாயில் 64 கோடி ரூபாய் செலவில் ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது


இன்றைய தினம்

1.1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு