Current Affairs – 19 August 2019
தமிழகம்
1.தமிழகத்தில் 7 நகரங்களில் புதிதாக போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம், கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அவை அமையவுள்ளன.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஐஏஎஸ் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வர்த்தகம்
1.உஜ்ஜீவன் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. நிறுவன சட்டம் 2013-இன் விதிமுறைகளுக்கு இணங்க, பங்கு ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 என்ற விலையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.1,200 கோடி திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
2.இந்தியன் ரயில்வேக்கு கடந்த 9 ஆண்டுகளில் தட்கல் டிக்கெட் பதிவு மூலமாக ரூ.10,729 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
உலகம்
1.பிரெக்ஸிட் விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
விளையாட்டு
1.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவிடம் தோல்வியடைந்தார் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்.
இன்றைய தினம்
- உலக புகைப்பட தினம்
- சர்வதேச மனிதநேய தினம்
- ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
- கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
- ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)
– தென்னகம்.காம் செய்தி குழு