தமிழகம்

1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

2.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்தவரையில் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் திருப்பூர் 95. 37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.


இந்தியா

1.தமிழகம் உள்பட 11 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 67.84 சதவீத வாக்குகள் பதிவாகின.

2.மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மன நோயால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு, அந்த தண்டனையை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தாண்டு, இதுவரை, 14 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

2.வருமான வரித் துறை, வரி ஏய்ப்பை தடுக்க, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான, படிவம் – 16ல், புதிய அம்சங்களை சேர்த்துள்ளது.

3.நடுத்தர வகையைச் சேர்ந்த சொகுசு காரை இணைந்து மேம்படுத்தும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா- ஃபோர்டு நிறுவனங்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

4.இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சென்ற பிப்ரவரியில் 120.54 கோடியை எட்டியுள்ளது.


உலகம்

1.நேபாளத்தின் முதல் செயற்கைக்கோள் நேபாளிசாட்-1 அமெரிக்க ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

2.புதிய வகை ஆயுதம் ஒன்றை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.சீனாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் குன்னேஸ்வரன், சாகேத் மைனேனி ஜோடி முன்னேறியது.


ன்றைய தினம்

  • இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
  • ஜெர்மனி பார்லிமென்ட் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
  • இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு