தமிழகம்

1.சென்னையை அடுத்த பேரூரில் ரூ. 6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

2.தமிழக காவல்துறையில் 52 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


இந்தியா

1.வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை, 70 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளையும் குறி வைத்து துல்லியமாக தாக்கும் வல்லமையுடையது. வெவ்வேறு உயரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறனை இது கொண்டுள்ளது.

2.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கும் (இஸ்ரோ) , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் (டிஆர்டிஓ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


வர்த்தகம்

1.தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) 2018-19ம் நிதியாண்டிற்கு வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.இஸ்ரேலில் கடந்த 5 மாதங்களுக்குள் 2-ஆவது முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் பெரும்பான்மைய நிரூபிக்க முடியாததால், இந்தத் தேர்தல் தற்போது மீண்டும் நடைபெற்றுள்ளது.

2.உலக வங்கி, சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், சீன நிதி அமைச்சகம் ஆகியவை 17ஆம் நாள், “புத்தாக்கச் சீனா:சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தி ”என்ற தலைப்பிலான அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன.


விளையாட்டு

1.உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக், சஞ்சித் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

2.ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூரை வென்றது.

3.சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-அஸ்வினி பொன்னப்பா இணை வெற்றியை ஈட்டியது.


ன்றைய தினம்

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)
  • திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)

– தென்னகம்.காம் செய்தி குழு