தமிழகம்

1.2016-ஆம் ஆண்டில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழகத்தில் உள்ள பெல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஏழு விருதுகள், சேலம் எஃகு தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஒரு விருது என மொத்தம் எட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டில் சிறந்த வகையிலான செயல்பாடுகளுக்காக 28 விஸ்வகர்மா தேசிய விருதுகள் 139 பேருக்கும், தேசிய பாதுகாப்பு விருதுகள் 128 பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

2.திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளியில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்  கால வரலாற்று ஆவணமான சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 24.59 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கர்நாடக மாநில எம்எல்ஏக்கள், அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.

2.ஒடிஸா மாநில முன்னாள் அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான டோலாகோவிந்த் பிரதான் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 93.

3.பல்கலைக்கழகங்கள் 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகளை பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றுக்கு தொலைநிலைக் கல்வியை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.தேனா பேங்க், விஜயா பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய 3 வங்கிகளையும் இணைக்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் 3-ஆவது மிகப்பெரிய வங்கிச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.தமிழ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பிரான்ஸ் நாட்டிலும், பிரான்ஸ் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்திலும் நடைபெறும் வகையில், அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

2.வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே இன்று நடைபெறும் சந்திப்பின்போது, அணு ஆயுத விலக்கல் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தென் கொரியா கூறியுள்ளது.

3.டைம் வார இதழை பிரபல ‘சேல்ஸ் போர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

4.இந்தியா – மால்டா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகின.


விளையாட்டு

1.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் கோரி, மல்யுத்த வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் நீரஜ் சோப்ரா உள்பட 20 பெயர்கள் அர்ஜுனா விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


ன்றைய தினம்

  • உலக மூங்கில் தினம்
  • சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம்
  • சிலி விடுதலை தினம்(1810)
  • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
  • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
  • ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1962)
  • தென்னகம்.காம் செய்தி குழு