தமிழகம்

1.மனித மற்றும் சாக்கடை கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்க திருப்பூர் மாநகராட்சி, பில்கேட்ஸ் அறக்கட்டளையின் தொழில்நுட்ப உதவியை ஏற்றுள்ளது.


இந்தியா

1.ஆந்திர மாநிலம் சித்தூரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராதிகா, ரஷியாவில் 18 ஆயிரத்து 510 அடி உயரமுள்ள மவுண்ட் எல்பிரர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
2.இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையில் ஷவுர்யா என்ற கடல் ரோந்துக் கப்பல் (OPV) சேர்க்கப்பட்டுள்ளது.
கடல் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ‘ஷவுர்யா’ 5வது கப்பல் ஆகும்.ஷவுர்யா கப்பல் கடலோரக் காவல்படை தளபதியின் (கிழக்கு) கட்டுப்பாட்டில் சென்னையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.100 மற்றும் ரூ.5 மதிப்பிலான ஞாபகார்த்த நாணயங்களை வெளியிட மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ரூ. 100 நாணயம் 35 கிராம் எடை கொண்டதாகவும், ரூ. 5 நாணயம் 6 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும்.
4.வேகமாகவும் மின்சக்தியிலும் ஓடும் கலப்பு வாகனங்களை தயாரிக்கும் FAME India திட்டம் மீண்டும் ஆறுமாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன் முதல் கட்டம் ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2017 வரை இருந்தது. ஆனால் செப்டம்பர் 2017 மாதம் வரை ஆறுமாதம் நீட்டிப்பு பெற்றிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆறுமாத காலத்திற்கு மார்ச் 31,2018 வரை கால நீட்டிப்பு பெற்றுள்ளது.
5.மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board) கர்நாடகாவில் நிலத்தடி நீரோட்ட மாதிரிகள் மேம்பாட்டிற்காகவும், நீர்த்தேக்க மேலாண்மைத் திட்டங்களை தயாரிப்பதற்காகவும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (IISc) புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.உக்ரைனில் நடந்த சர்வதேச பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நந்தகோபால், ரோகன் கபூர் ஜோடி, மற்றொரு இந்திய ஜோடி பிரான்சிஸ் ஆல்வின், கோனா தருண் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் நந்தகோபால், மஹிமா அகர்வால் ஜோடி, இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சர்மா, அனுஷ்கா பாரிக் ஜோடியை தோற்கடித்து, பட்டம் வென்றது.
2.இந்திய பாட்மிண்டன் அமைப்பு , முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோனேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பரிசு வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (World Water Monitoring Day).
உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003இல் அறிவித்தது.
2.1810 – சிலியில் முதலாவது அரசு (junta) அமைக்கப்பட்டது.
3.1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு