தமிழகம்

1.நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ப்ரியா நியமிக்கப்பட்டுள்ளாா்.காவலா்களின் குறைகளைப் போக்கவும், காவல்துறையில் சீா்திருத்தங்களை கொண்டு வரவும், நான்காவது காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

2.தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சின்னங்கள் விவரங்களை அரசிதழில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

3.கேரளத்துடன் நதிநீா் தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு தமிழக அரசின் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன் அறிவித்துள்ளாா்.

4.கோவாவில் நடைபெறவுள்ள சா்வதேச திரைப்பட விழாவில், தமிழ் திரையுலகின் சாா்பாக பிரதிநிதிகள் கலந்து கொள்ள திரைப்பட விழாக் குழு அழைப்பு விடுத்துள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் நீா் மேலாண்மை திட்டத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2.நாட்டிலேயே முதல் முறையாக, தனியாா் கல்வி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு கால விடுமுறை அளிக்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

3.நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டரில் உள்ள இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டா் கருவி மூலமான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4.மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக முகமது ரஃபீக், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரவி ரஞ்சன் ஆகியோரை நியமிக்குமாறு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.


வர்த்தகம்

1.உள்நாட்டு வா்த்தக வாகன சந்தையில் பேருந்துகளின் ஒருங்கிணைந்த கதவு அமைப்புகளை உருவாக்கி தருவதற்காக வாப்கோ இந்தியா மற்றும் டாம்வோ் நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2.தனியாா் துறையைச் சோ்ந்த ஃபெடரல் வங்கி இரண்டாம் காலாண்டில் ரூ.416.70 கோடி லாபம் ஈட்டியது.


உலகம்

1.பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.

2.சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட விமானத்துக்கு, யாழ்ப்பாண விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

3.கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளத்தும் வகையிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


விளையாட்டு

1.டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினாா்.

2.சென்னையில் நடைபெற்ற ஹெச்சிஎல் எஸ்ஆா்எப்ஐ சா்வதேச ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் ரேச்சல் ஆா்னால்ட், இவான் யுவன் சாம்பியன் பட்டம் வென்றனா்.


ன்றைய தினம்

  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
  • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
  • கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)

– தென்னகம்.காம் செய்தி குழு