தமிழகம்

1.மதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் அப்துல் கலாமின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு அவரது 87ஆவது பிறந்த நாளையொட்டி, ஆசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் (ஆசியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்) இடம்பெறுவதற்கான தேசிய மதிப்பீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
2.சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 25 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3.ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தீயவைகள் அழிந்து நல்லவைகள் மேலொங்கும் என்பதை உணர்த்துவதற்கான பண்டிகையாக ஆயுத பூஜை விளங்குகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் நாம் மேற்கொண்டுள்ள பணிகளில் வெற்றி அடைந்து இலக்கினை வெற்றிகரமாக அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.
4.பயணிகள் வசதிக்காக செங்கோட்டை-சென்னை, சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.செங்கோட்டை-சென்னை: செங்கோட்டையில் இருந்து நவம்பர் 6, டிசம்பர் 25 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82610) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 7, 21 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82601) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.இதுதவிர, தாம்பரம்-கொல்லம், புதுச்சேரி-சந்த்ரகாச்சி இடையேயும் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு (அக்.18) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5.சேலம்-கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் பயணக் கட்டணத்தில் ரூ.100 முதல் ரூ.150 வரை சலுகை வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.
6.தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டில் 60 சதவீதமாக உயரும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
7.தமிழகத்தில் தொழில் தொடங்க 30 நாள்களில் அனுமதி அளிக்கப்படுவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.பதற்றமான சூழலில், கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2.பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் பத்திரிகையாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர், நேற்று தமது பதவியை ராஜிநாமா செய்தார்.
3.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி மற்றும் அவரது கூட்டாளி உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.218 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
4.சண்டீகர் யூனியன் பிரதேசத்தில், சீக்கியப் பெண்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5.ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 3,000 மீட்டர் உயரத்தில் சுரங்கப் பாதைக்குள் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இதுபோல் சுரங்கப் பாதை அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


வர்த்தகம்

1.நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இரண்டாவது காலாண்டில் ரூ.4,110 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


உலகம்

1.வட அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் (56), இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் ஓர் அங்கமான அந்த தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இந்த பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ர்.


ன்றைய தினம்

1.இன்று உலக வேசெக்டொமி தினம்(World Vasectomy Day).
ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். இந்த அறுவைச் சிகிச்சையை வேசெக்டொமி என்கின்றனர். இதற்கு குழாய் அறுப்பு என்று பொருள். உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 18ஐ உலக வேசெக்டொமி தினமாக 2013இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தென்னகம்.காம் செய்தி குழு