தமிழகம்

1.தேசிய நூலக வார விழாவையொட்டி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணாநகர் முழு நேர கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

2.விண்வெளி சார்ந்து புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.


இந்தியா

1.அமலாக்கத் துறை இயக்குநராக அப்பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த முதன்மை சிறப்பு இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் சர்வதேச வேளாண் கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

3.பிகார் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அமரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு, மாநில ஆளுநர் மாளிகையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் சனிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


வர்த்தகம்

1.மத்திய நிதித் துறை செயலர், ஹஷ்முக் அதியா, வரும், 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.குஜராத்தைச் சேர்ந்த, 1981ம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், நிதித் துறை முதன்மை செயலர் உட்பட, பல முக்கிய பொறுப்புகளை வகித்துஉள்ளார்.

2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் (ரூ.850 கோடி) சரிந்துள்ளது.

3.நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 2017-18 பருவத்தில் 2.72 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.


உலகம்

1.ஒரு கிலோ என்பதற்கான வரையறையை பிளாட்டினம் துண்டுக்கு பதிலாக, மின்காந்தக் கருவியை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைப்பதற்கான தீர்மானம் வெர்சாய் நகரிலுள்ள சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உலகம் முழுவதிலும் தங்களது நாட்டின் சார்பில் கலந்து கொண்ட பெரும்பாலான விஞ்ஞானிகள், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும், கிலோ கிராம் மட்டுமின்றி, மின்சாரம் (ஆம்பியர்), வெப்பம் (கெல்வின்), அணுக்கள் போன்றவற்றின் அடிப்படைத் துகள்களின் அளவு (மோல்) ஆகியவற்றின் அலகுகளும் பழைய மாதிரி பொருள்களின் அடிப்படையில் இருந்து வந்ததற்கு பதில், நவீன மின்காந்த முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றம், வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

2.மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி  பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

3.கடந்த ஆண்டின் நவம்பர் மாதம், 44 பேருடன் மாயமான ஆர்ஜென்டீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர், பிங்கி ஜாங்ரா.

2.உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.

3.ஏடிபி பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்.


ன்றைய தினம்

  • ஓமன் தேசிய தினம்
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை இறந்த தினம்(1936)
  • புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறக்கப்பட்டது(1626)
  • அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)
  • தென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது(1993)
  • தென்னகம்.காம் செய்தி குழு