Current Affairs – 18 November 2017
இந்தியா
1.சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் வென்றுள்ளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3.இந்தியாவால் வழங்கப்பட்டு வரும் இந்திரா காந்தி அமைதி விருதுக்கு இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம்
1.2002 – சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு