தமிழகம்

1.தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700 பள்ளிகளை விரைவில் மூடுவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்தப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து மூன்று பேருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்டவற்றில் 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.சூரியனின் வெளிப்பரப்பை ஆராய 2020-ஆம் ஆண்டு “மிஷன் ஆதித்யா’ திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

2.பிரதமர் மோடி, தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா தான் பதிலளிப்பார் என்று கேள்விகளை தவிர்த்தார். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை.


வர்த்தகம்

1.மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், ‘நிதி ஆயோக்’ அமைப்பு, அனைத்து வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை, நுகர்வோரின் தரவுகளை பெறுவதற்கான கொள்கையை உருவாக்கியுள்ளது.


உலகம்

1.பிரெக்ஸிட் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நடைபெற்று வந்த அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக, முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் 4-ஆவது நாள் ஆட்டங்களில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

2.இந்திய நீச்சல் சம்மேளன வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • உலக தொலைத் தொடர்பு தினம்
  • அர்ஜெண்டினா ராணுவ தினம்
  • நார்வே அரசியல் நிர்ணய தினம்
  • நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)
  • வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)

– தென்னகம்.காம் செய்தி குழு