தமிழகம்

1.தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் இரு திட்டங்களை (எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ) இணைத்து, ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் இளநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


இந்தியா

1.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமையும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில், அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.


வர்த்தகம்

1.வேளாண் பரு­வத்­தில், நாட்­டின் உணவு தானிய உற்­பத்தி, 27.95 கோடி டன் என்ற புதிய உச்­சத்தை எட்­டும்’ என, மத்­திய வேளாண் அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.


உலகம்

1.காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.


விளையாட்டு

1.ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத் தலைவராக இந்தியாவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.லியானில் நடைபெற்ற யுரோப்பா லீக் கால்பந்து போட்டியில் அதெலெட்டிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.


ன்றைய தினம்

  • சர்வதேச அருங்காட்சியக தினம்
  • ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)
  • தொங்கோ யூ.கே.,ன் பகுதியாக்கப்பட்டது(1900)
  • இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது(1974)

–தென்னகம்.காம் செய்தி குழு