தமிழகம்

1.மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டார்.


இந்தியா

1.கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பனாஜியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 63.

2.இந்தியாவில் மொத்தம் 2,293 கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் தங்களின் இறுதி தேர்தல் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.


வர்த்தகம்

1.நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், பொருட்களின் விலையை குறைத்தோ அல்லது அளவை அதிகரித்தோ, ஜி.எஸ்.டி., பயனை நுகர்வோருக்கு வழங்க, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையமான, என்.ஏ.ஏ., அனுமதி வழங்கியுள்ளது.


உலகம்

1.மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.


விளையாட்டு

1.2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய நடைஓட்ட வீரர் இர்பான் கேடி.
ஜப்பானின் நவோமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய நடைஓட்ட சாம்பியன் போட்டியில் இர்பான் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.

2.இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இருந்து விலகினார் ரபேல் நடால்.
இறுதிச் சுற்றில் பெடரர்-டொமினிக் தீம் மோதுகின்றனர். முன்னணி வீரர்களான நடால், பெடரர் ஆகியோர் தத்தமது காலிறுதி ஆட்டங்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • மங்கோலியாவில் ஆண்கள் மற்றும் படைவீரர்கள் தினம்
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1850)
  • அல்ஜீரியா விடுதலை போர் முடிவுக்கு வந்தது(1962)
  • வணிக உரிமைகள் வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)

– தென்னகம்.காம் செய்தி குழு